கிளியும் எலியும்….
அன்றொரு நாள்
ஓர் இரவில்
அவன் அலறிய அலறல்
இன்னும் கூட என்
காதுகளில் ஒலிக்கிறது…
அவன் ஆசை ஆசையாய்
வளர்த்த கிளியை
பூனை ஒன்று கவ்விக்
கடித்துக் குதறுவதை
விழிப்பிலிருந்து எழுந்து
பார்த்து அவன் கதறிய கதறல்
இன்னும் கூட என்
காதுகளில் ஒலிக்கிறது…
உறவு ஒன்றைப் பறி
கொடுத்ததுபோல பெரும்
குரலெடுத்து அழுதான்…
இரத்த வெள்ளத்தில் கிடந்த
கிளியைப் பார்த்து…
அதனாலேயே இளமையில்
பூனைகள் மீது பெரும்
வெறுப்புக் கொண்டிருந்தான்…
பூனைகளைப் பார்த்தாலே
கல்லெடுத்து எறிவான்…
பல ஆண்டுகளுக்குப் பின்
சந்தித்த வேளையில் தான்
வளர்க்கும் பூனைக்குட்டியின்
அன்பையும் பாசத்தையும்
நேசத்துடன் விவரித்தபோது…
வியப்பாக இருந்தது எனக்கு..
இடையூறு செய்யும் எலிகள்
எல்லாம் மட்டுப்பட்டிருக்கிறது
என்றான் அவன்..
வா.நேரு, 11.07.26

No comments:
Post a Comment