Friday, 7 August 2026

அண்மையில் படித்த புத்தகம் : முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை


அண்மையில் படித்த புத்தகம் : முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை

நூல் ஆசிரியர்              : பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்

நூலக்கம் செய்தவர்         : மருத்துவர் .மீ.யாழினி, மாநில சமூக    வலைத்தளப் பொறுப்பாளர்,தி.மு..மகளிரணி

பதிப்பகம்                  : கீழடி வெளியீட்டகம்,சென்னை -42,77022 85544

மொத்த பக்கங்கள்          : 110,ஆகஸ்ட் 2025,விலை ரூ 100

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, (07.08.2026) நேற்று நடைபெற்ற இணைய வழிக்கூட்டத்தில் நான் பேசிய நூல் .

              

                                                        இந்த   நூல் கவிதை நூல்.முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மூன்று     வகையான கவிமாலைகளால் புகழாரம் சூட்டியிருக்கும் நூல்.இந்த நூலிற்கு படித்தவன் பதிவு என அய்யா பேரா முனைவர் .சுப்பிரமணியன் அவர்கள் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை போல இந்த நூல் பற்றி அணுகி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். ’தத்துவக்கொண்டாட்டம்என்னும் தலைப்பில் திராவிட முற்ப்போக்குப் படைப்பாளர் பேரவையின் தலைவர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் அவர்கள் ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.’செல்வ.மீனாட்சியின் நன்றிக்காவியம்என்னும் தலைப்பில் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்கள் ஒரு அணிந்துரை அளித்திருக்கிறார்.’நன் சாற்றுக்கவிஎன்னும் தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற  மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் தனது வாழ்த்தினை ஒரு கவிதையாகக் கொடுத்திருக்கிறார். நட்புத் தமிழ் வட்டம், மதுரை-தலைவர் & நிறுவனர் அய்யா புலவர்  நாநா ஆறுமுகம் அவர்கள்  வாழ்த்துரை அளித்துள்ளார். தொடர்ந்து காப்புச்செய்யுள்,அவையடக்கம் முடிந்து கலைஞர் பற்றிய கவிதைகள் ஆரம்பிக்கின்றன. கலைஞர் அந்தாதி கலம்பமாலை (–கட்டளைக் கலித்துறை) என்னும் தலைப்பிட்டுக் முதல் கவிதையைக் கொடுத்திருக்கிறார்.



.

அந்தாதி என்பது                           " அந்தாதி என்பது    ஒரு பாடலின் இறுதி அடுத்த பாடலின் முதலாக வருமாறு தொடுக்கும் இலக்கண முறையாகும். கதம்பமாலை என்பது பல வகையான பாவினங்கள் அல்லது பல்வேறு உறுப்புகளைப் பூமாலை போல ஒன்றாகத் தொடுத்து வழங்கும் ஒரு பிரபந்த (சிற்றிலக்கிய) வகையாகும்

 

பெயர்க்காரணம்:                         பல வகையான மலர்களைச் சேர்த்துத் தொடுத்த கதம்பப் பூமாலை போல, பல்வேறு துறை சார்ந்த கருத்துகள் அல்லது பல பாவகைகளைக் கொண்டு அமைக்கப்படும் மாலை கதம்பமாலை எனப்படும் என விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது.

 

                                                              கட்டளைக் கலித்துறை  என்பது கலித்துறையின் ஒரு வகையாகும். இப்பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு (ஒற்று நீக்கி), ஒரு குறிப்பிட்ட வரையறைப்படி ஒழுங்காகப் பாடப்படும். 'கட்டளை' என்றால் அளவு அல்லது கணக்கு என்று பொருள். நேரசை என்றால் 16, நிரையசை என்றால் 17 எழுத்துகள்."

 

இந்த நூல் பற்றி ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் இணைய வழிக்கூட்டம் 211-ல்  நான் ஆற்றிய உரை, கீழே இருக்கும் யூ டியூப் இணைப்பில்  இருக்கிறது. வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். அய்யா மாரி. கருணாநிதி அவர்களின் தலைமையுரை,அண்ணன் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்களின் ஏற்புரை என ஒவ்வொரு உரையும் அதற்கான தனித்தன்மையோடு இருக்கிறது.


 https://www.youtube.com/live/uhqLlpzTsH0?si=HFjGIBPn3Q7TOkHr




No comments:

Post a Comment