ஓர் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற
நிலையில் பொதுவாழ்வில், இலக்கிய உலகில் இருக்கும் பலரும் நண்பர்களாகத் தெரிந்தவர்களாக
இருக்கிறார்கள்.அதில் ஆத்திகர்கள், நாத்திகர்கள், பொதுச்சேவை செய்பவர்கள் எனப்
பலரும் உண்டு.பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட எனக்கு ,தீபாவளி என்பது ஒரு
பண்டிகை என்பதல்ல,எப்படி ஏமாற்றப்பட்டோம் பார்ப்பனர்களால் என்பதற்கான கண்கூடான
,இன்றும் அத்தாட்சியாக இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு. கார்ப்பரேட் நிறுவனங்களால் சலுகை
தரப்பட்டு,மிகப்பெரும் விற்பனைச் சந்தையாக தீபாவளி இன்றைக்கும் இருக்கிறது.
எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து நான்
தீபாவளி கொண்டாடுவதில்லை.தீபாவளி வாழ்த்துகள் எவருக்கும் சொன்னதில்லை. ஆனால் என்னை
விட மூத்தவர்கள்,நான் மதிப்பவர்கள் எனக்கு தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லும்போது அதனைக்
கடந்து சென்று விடுவதுண்டு,பதில் போடாமல்.
ஆனால் நான் மிகவும் மதிக்கிற ஒருவர்,தீபாவளி
என்பது நம் முன்னோர்களைப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் கொன்ற நாள் என்பதால் ,துக்க
நாளென நான் கொண்டாடுவதில்லை என்பதைத் தெரிந்த ஒருவர் தீபாவளி வாழ்த்து என எனக்கு அனுப்பியிருந்தார்.அவருக்குப் பதிலாக இன்று என்
ஸ்ட்டேடஸில் வைத்திருக்கும் ‘’நரகாரசுரப் படுகொலை ஏன்,எப்படி?’ என்னும் என் வலைத்தளப்
பதிவை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் பதில்..
“ நானும் கொண்டாடுவதில்லை. ஆனால் சிறு வயதில்
புத்தாடை கிடைக்கும் ஒரு நாள், வருடத்திற்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், கிடைக்காத பலகாரங்கள் எல்லாம் அன்று ஒரு நாள்
கிடைத்து ருசிப்பதும். வெடி வெடிப்பதும், சினிமா தியேட்டரில் முதல் ஷோவில் படம் பார்ப்பதும் என்று ஆனந்தத்தின்
உச்சியில் இருந்த காலம் அது. ஏன் இந்தப் பண்டிகை என்றெல்லாம் ஆராய்ந்தது இல்லை.
ஆனால் என்று வரும் அந்தப் பண்டிகை என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பண்டிகை தினம்
வந்து விட்டாலும் உடல் முழுவதும் பரவசம்.
ஆனால் இப்பொழுது?!
புத்தாடை
எடுக்கும் நிகழ்வு பண்டிகைக்காகக் காத்திருப்பதில்லை. பலகாரங்களோ அன்றாடம் பலப் பல
கடைகளில் கிடைக்கின்றன. வெடி வெடிப்பதில் ஏனோ ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்பதால் தீபாவளி வரை காத்திருப்பதில்லை. அவ்வப்பொழுது
நடந்தேறும் நிகழ்வாக அது மாறிவிட்டது. முதல் ஷோ சினிமா எல்லாம் பிடிக்காமல்
போய்விட்டது.
இப்பொழுது எந்தப் பண்டிகையுமே பரவசத்தைக் கொடுப்பதில்லை.
பண்டிகை காரணமா?!
அல்லது எனக்கு
வயதாகி விட்டது என்பது காரணமா?! ஆனால் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்ற சடங்கு பழகிவிட்டது.
நீங்கள் கொண்டாடுவதில்லை என்று தெரிந்திருந்தும் அந்த வாழ்த்துக்கள் அனுப்பியது
தவறுதான். “
என்று
பதில் அனுப்பியிருந்தார்.அவர் பெயர் இங்கு வேண்டியதில்லை. ஆனால் உணர்வைப் புரிந்துகொண்டு
பதில் அனுப்பிய அவருக்கு மனமார்ந்த நன்றி.
தீபாவளியைப் பற்றி எழுதியிருக்கும் எனது வலைத்தளப்பகுதிகளைப்
பார்த்தேன்.பல நேரங்களில் எழுதியது, கட்டுரை ..கவிதை வடிவங்களில் .ஒரு சிறு புத்தகம்
போடும் அளவிற்கு இருக்கிறது..
இணைப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.வாசித்துப்பாருங்கள்.
https://vaanehru.blogspot.com/2024/10/blog-post_31.html
https://vaanehru.blogspot.com/2024/10/blog-post_30.html
https://vaanehru.blogspot.com/2016/10/blog-post_31.html
https://vaanehru.blogspot.com/2013/11/blog-post.html
https://vaanehru.blogspot.com/2011/10/blog-post_25.html
https://vaanehru.blogspot.com/2013/11/blog-post_8967.html
தீபாவளிக்கு ஏன் வாழ்த்துச்சொல்வதில்லை என்பதைப் பற்றி அழுத்தம் திருத்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் அய்யா ஆ.இராஜா அவர்கள் பேசிய காணொளி யூ டியூப்பில் இருக்கிறது.வழக்கறிஞர் தோழர் அ.அருள்மொழி அவர்களின் உரை யூ டியூப்பில் இருக்கிறது.திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்ட திராவிடர் கழகத்தலைவர்களின் உரை யூ டியூப்பில் இருக்கிறது,எழுத்துகள் புத்தகங்களாக இருக்கிறது.அருமைக்குரிய தமிழர்களே தயவு செய்து இவற்றைப் படியுங்கள்,யூ டியூப் கேளுங்கள்/
தீபாவளி பார்ப்பனர்கள் தந்திரத்தால் வென்ற நாள். நமக்குத் துக்க நாள்.உணருங்கள்,உணர்த்துங்கள்.
எதையும் எந்த திருவிழா, ஆனாலும், திருமண சடங்கு ஆனாலும், பரிகாரம் சடங்கு ஆனாலும் அதை பகுத்து அறிந்து நடக்கும் வழக்கம்
ReplyDeleteநம்ம மக்களுக்கு இல்லாம போனது கவலைதான்.
மக்கள் பகுத்தறிவு பாதையில் பயணம் செய்யும் இந்த கருத்துரை துணை செய்யட்டும்
கவலையுடன் ஆட்டோ செல்வம்
நன்றி தோழர் @ ஆட்டோ செல்வம்
ReplyDelete