நடுரோட்டில் நாம்
நடந்து கொண்டிருக்கும்போது
நம் உடலில் இருக்கும்
சட்டை
திடீரெனத் தீப்பற்றி
எரிந்தால்..
காய்ந்து நிற்கும்
மரம்
நம் கண்முன்னே
எந்தவிதத் தீயும்
இன்றித்
திடீரெனத் தீப்பற்றி
எரிந்தால்…
நம்கண் முன்னே
விலங்குகள் எல்லாம்
திடீர் திடீரென
இறந்து விழுந்தால்…
இவைகள் எல்லாம்
கற்பனைகள்
இல்லை நண்பர்களே…
வெகுவிரைவில் நடக்க
இருப்பவை..
எந்த ஆண்டும் இல்லா
அனல் காற்றால்
கதி கலங்கி நிற்கிறது
இத்தாலி…
ஐரோப்பா நாடுகள்
பலவும்
அமெரிக்க நாடும்
அனல் காற்றால்
பொசுங்கும்
அவல நிலை உலகெங்கும்..
எக்குத்தப்பாய் உயர்ந்து
நிற்குது வெப்பநிலை
சீனாவில் ஜப்பானில்
மனிதர்கள் மட்டுமல்ல…
விலங்குகளும் கூட
வெயிலுக்கு அஞ்சி
பதுங்கு குழிகளைத்
தேடி ஓடும் அவலம்..
இயற்கையை அழித்தால்
மனிதன்
இயற்கையாலேயே சாவான்…
பேராசை விடு மனிதா
!
இயற்கையை நேசி…
மரங்களை வளர்…
பல்லுயிர் போற்று..
இல்லையெனில்
அழிவது மனிதர்கள்
மட்டுமல்ல
உலகின் அனைத்து
உயிர்களும்தான்..
வா.நேரு
19.07.2023
..
No comments:
Post a Comment