Wednesday, 20 September 2023

நமக்கு நாமே சொல்லிப்பழகுவோம்

 

தனித்து படுத்திருக்கும்

கிழவிக்கு

நாக்கு முழுக்க கொடுக்குகள்..

 

எவரைச்சொல்கிறோம்

ஏன் சொல்கிறோம் எனும்

புரிதல் இல்லாமல்

பொக்கை வாய் திறந்து

அனலாய்க் கக்குகிறார் சொற்களை...

 

இளம் வயதில் கணவனால்

பட்ட துன்பங்களோ

முதும்வயதில் தனியாக

இருக்கும் துயரமோ

அருகில் வருபவர்களிடம்

அள்ளிக்கொட்டுகிறார் வெறுப்பை..

 

ஊதியம் பெற்று வந்தாலும்

அருகில் இருப்பவரிடம்

காட்டும் அன்பே

இந்த நேரத்து நிம்மதி என்று

யார் விளக்குவார் அவரிடம்?...

 

முதுவயது ஆகும்போது

அன்பே முதன்மை என்பதை

நமக்கு நாமே சொல்லிப்பழகுவோம்

நாமும் ஒருநாள்

அந்த நிலை எட்டும் வாய்ப்புக்கிட்டினால்

அருகில் இருப்பவரே உறவினர்...

நமக்குப் பணிவிடை செய்பவரே

நம் உறவுகள் எனும்

உணர்வினை வளர்ப்போம் .

 

                            வா.நேரு

                            20.09.2023

5 comments:

Anonymous said...

முதியோருடன் அனுபவித்தவர்கள் அறிவார்கள்

முனைவர். வா.நேரு said...

ஆமாம்...நன்றி

anandam said...

சாகும்வரை மனிதநேயத் தொண்டாற்றி மறைந்த பெரியாரய்யா! கலைஞரய்யா போல மற்றவரை மதித்தும் நகைச்சுவை உணர்வோடு கலந்தும் வாழ நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம்! வெல்வோம்!!

anandam said...

சாகும்வரை மனிதநேயத் தொண்டில் வாழ்ந்த பெரியாரய்யாவையும் கலைஞரய்யாவையும் மனத்திலேந்தி நகைச்சுவை உணர்வோடு நகர்ந்து செல்வோம்! நாளை நாமும் வெல்வோம் அண்ணே!

முனைவர். வா.நேரு said...

ஆமாம்...நகைச்சுவை நல்ல மருந்து அண்ணே...