இராமாயணத்து இராமரும்
மோடியும் ஒன்று
என்றொருவர் கவிதை
எழுதியிருக்கிறார்...
மோடியை வரவேற்று...
உண்மைதான்...
மனைவியைக் காட்டில்
தவிக்க விட்டுவிட்டு
நாட்டை ஆண்டவர் இராமர்..
மனைவி இருப்பதையே
தேர்தல் பத்திரங்களில்..
சமூகத்திற்கு....
காட்டாமல் குஜராத்
மாநிலத்தை..நாட்டை
ஆண்டவர் மோடி...
விலங்குகள் வாழும்
காட்டில் பயந்து பயந்து
பிள்ளைகளை வளர்த்தாள்
இராமயணத்தில் சீதை..
ஒற்றை அறை வீட்டுக்குள்
பயந்து பயந்து வாழ்ந்தார்...
வாழ்கின்றார் யசோதாபென் மோடி..
இருவரும் ஒன்றுதான்..
சரியாகத்தான் கவிதை
எழுதியிருக்கிறார் அவர்...
வா.நேரு,
06.04.2025
3 comments:
இவரும் அவரும் ஒன்றானலும் அயோத்தியில் இவரை அலைக்கழித்ததை நாடறியுமே!
ஆமாம்.நன்றி.
Post a Comment