Showing posts with label குறுங்கவிதை. Show all posts
Showing posts with label குறுங்கவிதை. Show all posts

Monday, 3 March 2025

செத்தபின்பும்....

 

ஒரு கொள்கைக்காகவே

வாழ்தல்…

ஒரு கொள்கைக்காகவே

பேசுதல்…

ஒரு கொள்கைக்காகவே

சாகுதல்…

இவையே ஒரு மனிதரை

செத்தபின்பும்

பேசவைக்கும்..

அவரைப் பற்றிப் பலரும்

எழுத வைக்கும்…

 

                       வா.நேரு,03.03.2025

Saturday, 1 March 2025

தமிழ்நாடு வெல்லும்...தளபதி வாழ்க!

 

பிறந்த நாள்

கொண்டாட்டம் என்பது

கொள்கையைப்

பிரச்சாரம் செய்யும்

ஒரு வழிமுறை

என்றார் பெரியார்…

பட்டி தொட்டி எங்கும்

ஊர்தோறும் இன்று

உடன்பிறப்புகள்

ஒன்றிணைந்து உரக்க

முழுக்கங்களை

எழுப்பியிருக்கிறார்கள்...

திராவிட மாடல்

அரசின் நாயகர்

மாண்புமிகு முதல்வர்

தளபதி மு.க.ஸ்டாலின்

வாழ்க ! வாழ்க! என

வாழ்த்தி நாமும்

முழக்கம் சொல்லுவோம்..

‘தமிழ்நாடு போராடும்

தமிழ்நாடு வெல்லும்’

                        வா.நேரு,01.03.2025

 

 

Friday, 21 February 2025

கரும்பு தந்த தீஞ்சாறாய்...

நம் தாய் நமக்கு

தொட்டிலில் இட்டு

தாலாட்டிய மொழி..

அடிபடும்போதும் நாம்

அடிக்கும்போதும் நம்மை

அறியாமல் நம்

வாயிலிருந்து வந்து

விழும் மொழி…

நம் எண்ணத்தில்

எப்போதும் ஓடும் மொழி..

‘கரும்பு தந்த தீஞ்சாறாய்’

எப்போதும் இனிக்கும்

எம் மொழி தமிழாம்!

இனிய தாய்மொழி

நாள் வாழ்த்துகள் !

                        வா.நேரு,21.02.2025


Thursday, 20 February 2025

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

 

மூளைக்குள்

அப்பிக்கிடக்கும்

அழுக்கை அகற்றுவது

அவ்வளவு ஒன்றும் எளிதல்ல...

ஆபத்தான மலக்கழிவு

நுண்ணுயிர்கள் மண்டிக்கிடக்கும்

கும்பமேளா ஆற்றில்

குளிப்பதற்குப் போட்டியிடும்

மனிதர்களுக்கு உண்மையை

உணர்த்துவது அவ்வளவு சுலபமல்ல..

நாட்டை ஆள்பவர் முதல்

நாடோடிகள் வரை

இந்த மலக்குப்பைக் குட்டையில்

மூழ்கி எழுந்தால்

மோட்சம் என நம்புவதை

முறிப்பது அவ்வளவு எளிதல்ல..

பகுத்தறிவுக் கண்ணாடி அளித்த

தந்தை பெரியாரை நினைத்திடுவோம்

இந்தக் குப்பைகளுக்குள் நாம்

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

                               வா.நேரு,20.02.2025

Saturday, 15 February 2025

துள்ளலும் மகிழ்ச்சியுமே தனி…

உவகை

மகிழ்ச்சி

உற்சாகம்

கைகுலுக்கல்

உண்மையான

உளமார்ந்த நலமா?...

விசாரிப்புகள்..

ஒரு கொள்கைக்காக

எங்கெங்கோ பிறந்த

நாமெல்லாம் சாதி மதம்

துறந்து ஒன்றிணைந்து

செயல்படுகிறோம் எனும்

உணர்வால் ஒன்றிணையும்

கொள்கை உறவுகள்

சந்திப்பால் ஏற்படும்

துள்ளலும் மகிழ்ச்சியுமே தனி…

                      வா.நேரு,16.02.2025

           (சிதம்பரத்தில் நேற்று திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம்)


Wednesday, 12 February 2025

அவைகள் பெயரால்

 

மாறிக்கொண்டே

இருக்கிறது உலகம்..

மாறாமல் இருப்பது

கடவுளும் மதமும்…

அவைகள் பெயரால்

ஏற்படுத்திய

அர்த்தமற்ற சடங்குகளும்

அதற்கு மக்கள்

செலவழிக்கும் பெரும்பணமும்..

அவைகள் பெயரால்

நடைபெறும் சச்சரவும்

சண்டைகளும்

                           வா.நேரு,12.02.2025

Sunday, 9 February 2025

நீயும் நானும் உணர்வோமா?

 

கூடி வாழ்தல்

ஒரு கலை...

மனிதர்களைவிட

சிற்றுயிர்கள்தான்

கூடிவாழ்தலுக்கு

முன்னெத்தி ஏர்கள்..

எறும்பும் தேனியும்

ஏன் கரையானும் கூட

பொறுப்புணர்வோடு

இணைந்து வாழ்தலுக்கு

எடுத்துக்காட்டாய்

இப்புவியில்...

நீயும் நானும் உணர்வோமா?

வீண் சண்டையிட்டு மடிவோமா?

                               வா.நேரு,09.02.2025

Thursday, 6 February 2025

தம்மின் தம் மக்கள்...

 

என் கவிதைகளை

நிறையப் படித்திருக்கும்

என் தோழர் ஒருவர்

என் மகனின் கவிதையைப்

படித்துவிட்டுப் பாராட்டினார்…

உங்கள் கவிதையைவிட

கவித்துவத்தில் உங்கள்

மகன் கவிதை நன்றாக

இருக்கிறது என உளமாறப்

பாராட்டி மகிழ்ந்தார்…

இன்னொரு நண்பர் அவனது

கவிதையை வாட்சப்

ஸ்டேட்டசில் வைத்திருந்தார்…

'தம்மின் தம் மக்கள்...'

பெருமைதான் பெற்றோராகிய

எங்களுக்கு….

                வா.நேரு , 06.02.2025

 

…

Tuesday, 4 February 2025

அக்கு அக்காய் ...

 

ஓவியக் கூடம்…

அதனதன் இடத்தில்

வரையப்பட்ட ஓவியங்கள்

வைக்கப்பட்டிருந்தால்

ஓவியக் கூடம்

அழகாக இருக்கக்கூடும்..

ஆனால் தாறுமாறாய்ப் படங்கள்

கூடத்திற்குள் கிடப்பது போல

நம் மனம் இருக்கிறது…

நம் மனதிற்குள் ஓடும்

பல எண்ணங்கள்…

நம் மனதிற்குள் கிடக்கும்

எங்கெங்கோ பார்த்த காட்சிகள்…

அக்கு அக்காய் எவ்விதத்

தொடர்பும் இன்றி ஒழுங்கும் இன்றி

மனதிற்குள் தனித்தனியாய்க்

துண்டு துண்டாய்க் கிடக்கிறது…

அதை ஒழுங்குபடுத்த

முயல்வதுதான் வாழ்க்கையோ?...

அதை முயன்று முடியாமல்

போவதுதான் மனக்குழப்பமோ?

                          வா.நேரு,04.02.2025

             நன்றி: உலக சரித்திரம் –ஜவஹர்லால் நேரு,

             தமிழில் ஒ.வி.அளகேசன்

Monday, 3 February 2025

பகையாகக் கருதுகிறது…..

 

‘ஆரிய மாயை ‘எழுதி

சிறைக்குச் சென்றவர்…

அவாளின்  நரித்தனங்களை

எழுத்துகளால் விளக்கியவர்

சூத்திரன் சத்திரியனாக மாற…

பார்ப்பானுக்கு கொட்டி அழுத

செல்வத்தை ‘சிவாஜி கண்ட

இந்து ராஜ்யத்தில்’ எவருக்கும்

விளங்கும் வண்ணம் எழுதியவர்

சிவாஜி என்னும் பெயரைக்

கணேசனுக்குப் பெரியார்

சூட்டக் காரணமாக இருந்தவர்…

அண்ணா எழுதியவை பேசியவை

அனைத்தும் அவாள்களின்

கோட்டையைத் தகர்க்கும்

அறிவுக்குண்டுகள் என்பதால்தான்

இன்றும் பார்ப்பனியம் பெரியாரோடு

பேரறிஞர் அண்ணாவையும்

பகையாகக் கருதுகிறது…..

அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!

                                   வா.நேரு,03.02.2025

  

 

 

 

படி நடிக்கவைத்தவர்

Saturday, 1 February 2025

பக்தர்கள் ஏன் முயற்சி செய்தல்கூடாது?...

 

‘கும்பமேளாவில்

மிதிபட்டு செத்தவர்கள்

செத்தவர்கள் அல்ல..

நேரடியாக சொர்க்கத்திற்கு

சென்றவர்கள்’ என

ஒரு சாமியார்  நாட்டிற்கு

செய்தி சொல்லியிருக்கிறார்..

கும்பமேளா இன்னும்

முடியவில்லை..இன்னும்

நாட்கள் பல இருக்கின்றன..

கும்பமேளாவில் இருக்கும்

சாமியாரைப் படுக்கவைத்து

அவர் மேல் நடந்து  நடந்து

அவர் மேல் விழுந்து விழுந்து

அவரைச்  சொர்க்கத்திற்கு

அனுப்ப பக்தர்கள் ஏன்

முயற்சி செய்தல் கூடாது?...

                        வா.நேரு,01.02.2025

                         குறுங்கவிதை(56)

Friday, 31 January 2025

வெற்றிச்சிரிப்பு சிரிக்கிறார்!...

 

நூறு ஆண்டுகளுக்கு

முன்னால் தொடங்கப்பட்ட

குடி அரசு இதழ்…

வைக்கம் போராட்டத்தில்

தலைமை ஏற்று

சிறையில் இருக்கும்போது

பெரியாருக்கு உதித்த எண்ணம்!

பத்திரிக்கை எல்லாம்

பார்ப்பனிய மயம்!அதை

அடித்து நொறுக்கக் கிளம்பிய

ஈரோட்டுச் சிங்கம் !

நானே எழுதுவேன்! நானே

அச்சிடுவேன்! நானே படிப்பேன்

எனத் தொடங்கிய குடியரசு இதழ்

பெற்ற வெற்றிகளால்…

அதனால்  நம் திராவிட இனம்

பெற்ற வெற்றிகளால்

வெற்றிச்சிரிப்பு சிரிக்கிறார்!

இதழாளர் பெரியார் !

                       வா.நேரு,31.01.2025

                       குறுங்கவிதை(55)

 

 

Thursday, 30 January 2025

இனிப்புக் கொடுத்து மகிழ்ந்த...

 

'அகண்ட பாரதம்?'

அமைத்தபின்பு

கரைப்பதற்காக

கோட்சேவின் அஸ்தியைக்

காப்பாற்றி வைத்திருக்கும்

கும்பலின் பிரதிநிதி..

துள்ளத் துடிக்க காந்தி

குருதி கொட்டிச் சாய்ந்து

இறந்ததை.. இனிப்புக்

கொடுத்து மகிழ்ந்த

கொலைக்கும்பலின்

வழியில் வந்த வந்தேறி…

மதச்சார்பற்ற நாடாய்

இந்தியா இருக்கும்

என்று சொன்னதற்காக

தேசத்தந்தையைக் கொன்று

தீர்த்த பார்ப்பன வெறியனின்

இனத்து  உறவு …

'காந்தியைக் கேலி

செய்கிறீர்கள்' எனத்

தமிழ்நாட்டு முதல்வரைப்

பார்த்து அவர்...

குற்றம் சாட்டியிருக்கிறார் !

எங்கே போய்ச்சொல்வது?

இதை எப்படிச்சொல்வது?

                             வா.நேரு,30.01.2025

                               குறுங்கவிதை(55)

 

 

Wednesday, 29 January 2025

கடவுள் கணக்கு!...

இந்தப் ‘புண்ணிய பூமியில்!’

பக்தியின் பெயரால் நீங்கள்

எதையும் செய்யலாம்…

பைக்கில் செல்லும் பெண்ணை

சாட்டையால் அடிக்கலாம்…

கஞ்சாவை அடித்துவிட்டு

பெண்ணின் கையைப்

பிடித்து இழுக்கலாம் !

சாம்பலைப் பூசிக்கொண்டு

அம்மணமாய்த் திரியலாம்!

அந்தக் கோலத்திலேயே

ஆசி வழங்கலாம் பெண்களுக்கு..

பக்தியின் பெயரால் கூடும்

கூட்டத்தில் நெரிசலில்

மிதிபட்டுச் சாகலாம் !

எதற்கும் கேள்வி கிடையாது!

எந்தக் கணக்கும் கிடையாது!

காந்தி கணக்குப் போல

இது எல்லாம் கடவுள் கணக்கு!

                                 வா.நேரு,29.01.2025

                                  குறுங்கவிதை(54)


Tuesday, 28 January 2025

நாம் சின்னஞ்சிறியவர்கள்....

சூரிய ஒளியினால்

வளரும் தாவரங்கள்போல்

மனிதர்களின் மனம்

சுற்றுப்பயணத்தால் வளர்கிறது!

பயணம் நம்மைப்

பக்குவப்படுத்துகிறது…

இயற்கைக்கு முன்னால்

நாம் சின்னஞ்சிறியவர்கள்

என்பதை எப்போதும்

நினைவுபடுத்துகிறது…

வேற்றுமைக்குள் ஒற்றுமையை

ஒற்றுமைக்குள் வேற்றுமையை

நமக்கு அடையாளம்

காட்டும் கண்ணாடிதானே பயணம்..

மனிதர்களின் வாழ்க்கைக்கான

போராட்டத்தை ஒவ்வொரு

இடமும் நமக்கு புதிது

புதிதாய்க் காட்டுகிறது…

பயணிப்போம் நம்மை

நாமே புரிந்துகொள்ள!..

மானுடத்தைப் புரிந்துகொள்ள!

                              வா.நேரு,28.01.2025

                               குறுங்கவிதை(53)

 

 


Saturday, 25 January 2025

உண்மையை உணர்ந்த நேரம்…

 

ஒவ்வொருவர் உரையும்

ஒவ்வொரு மாதிரி…

ஒவ்வொருவர் குரலும்

ஒவ்வொரு மாதிரி…

ஒற்றைப் புள்ளியாய்

இணைக்கும் பெரியாரியல்

தத்துவத்தை…

தங்கள் தங்கள் வாழ்க்கை

நிகழ்வுகளால்…

படித்த புத்தகங்களால்…

அவரவர் பாணியில் பாடம்

நடத்தி மகிழ்ந்த நேரம்..

அற்புதமாய் மாணவ மாணவிகள்

கேட்டு உண்மையை

உணர்ந்த நேரம்…

வாழ்க! பெரியாரியல்

பயிற்சிப் பட்டறைகள் !

ஊரெங்கும் நடக்கட்டும் பட்டறை!

அழியட்டும் பழமை இருட்டறை…

                                  வா.நேரு,25.01.2025

                                  குறுங்கவிதை(53)




Friday, 24 January 2025

நெருப்புக் குச்சிகள்...

 

புரட்சியைப் பற்ற வைக்கும்

நெருப்புக் குச்சிகள்

புத்தகங்களே!

தாங்கள் அடிமைகளே

என்பதை அடிமைகளுக்கு

உணர்த்தும் ஆயுதங்கள்

புத்தகங்களே…

அதிலும் தந்தை பெரியார்

எழுதிய புத்தகங்கள் எல்லாம்

பழமை அனைத்தையும்

சுட்டுப் பொசுக்கி

புதுமை படைக்க

உந்தும் புத்தகங்களே…

                       வா.நேரு,24.01.2025

                        குறுங்கவிதை(52)

 

 

Thursday, 23 January 2025

என்ன ஆயிற்று இவனுக்கு?...

குழந்தைகளுக்கு கள்ளைக்

கொடுத்து குடிக்கச்சொல்லி

கள்ளின் பெருமை பேசி

இருக்கிறான் ஒருவன்…

ஒட்டிய போட்டோவை வைத்து

தமிழ் நாட்டிற்கே

பல வருடமாய்ப் படம்

காட்டி இருக்கிறான் இவன்…

பித்துப் பிடித்தவன் போலக்

கையைக் காலை ஆட்டி

வெறிபிடித்தவன் போலச்

சொற்களைக் கொட்டி..

என்ன ஆயிற்று இவனுக்கு?

சரியாகத்தான் அய்யா ஆசிரியர்

கி.வீரமணி சொல்லியிருக்கிறார்..

‘பைத்தியங்களுக்குத் தேவை

வைத்தியமே தவிர

விளக்கங்கள் அல்ல’ என்று

                         வா.நேரு,23.01.2025


Tuesday, 21 January 2025

இனிய படகுஊர்....

 

பயணங்கள் எப்போதும்

புதிய அனுபவங்கள் மட்டுமல்ல..

புத்துணர்ச்சியும் புரிதலும்கூட..

நம் ஊர் பேருந்துகள்போல

படகுப் பேருந்துகள் ..

நிற்கும் படகை உடனடியாக

கயிற்றால் கட்டி நிறுத்த இருவர்..

பெண் நடத்துநர்கள்..

இருகரையிலும்

மாறி மாறி நிற்கும்

படகுப் பேருந்துகள்..

படகு வீடுகள்…

வகைவகையாய் மீன் உணவுகள்…

படகையும்

பயணத்தையும் வைத்தே

முழுமையாக இயங்கும் ஊராய்

நம் அண்டை மாநிலத்து ஆலப்புழா..

இயற்கை அழகினால் இதயத்திற்குள்

நுழையும் இனிய படகுஊர்

இன்பம் பொங்கும் நல்ஊர்…

                           வா.நேரு,21-01-2025

                            குறுங்கவிதை(50)

Tuesday, 14 January 2025

தாக்கும் நாளும் இது!...

திருக்குறளின் பொருளால்

நாம் பெருமை கொள்ளும்

நாள் மட்டும் அல்ல…

திருட்டு சனாதனக் கூட்டம்

அபகரிக்கப் பார்க்கும் திருக்குறளின்

சனாதன எதிர்ப்பைச் சொல்லும்

நாளும் இது !

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

என்ற திருவள்ளுவரை

பிறக்கும்போதே மனிதர்கள்

வேறுபடுகிறார்கள் என்னும்

வர்ணாசிரமத் திருடர்கள்

திருடப்பார்ப்பதை கருத்துகளால்

தடுக்கும் நாளும் இது!

அறிவுக்கு ஒவ்வாத

புராணக்குப்பைப் புளுகர்கள்

‘மெய்ப்பொருள் காணும் அறிவை’

தமது என்றால் …

வெகுண்டு கருத்துகளால்

தாக்கும் நாளும் இது!

இனிய திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! 

                                       வா.நேரு

                                    குறுங்கவிதை(49)