Tuesday, 6 June 2023

காந்தி தேசம் அழுது கொண்டிருக்கிறது…

 

காந்தி தேசத்து மக்கள்

கதி கலங்கித் துடிக்கிறார்கள்…

கோட்சே வாரிசுக் கொடுங்கோலர்கள்

குதுகலித்து சிரிக்கிறார்கள்…

 

மல்யுத்த மகள்களின் போராட்டம் பார்த்து

காந்தி தேசம் அழுது கொண்டிருக்கிறது…

தகுதி திறமை பேசும் கோட்சேவின் வாரிசுகள்

இந்தக் கொடியவனை காமுகனை கேடியை

மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக எப்படி

ஆக்கினார்கள்?

அவன் மேல் இருக்கும் கொலை வழக்குகளுக்காகவா?

அவன் மேல் இருக்கும் பாலியல் வழக்குகளுக்காகவா?

எதன் அடிப்படையில் ஆக்கினார்கள் எனப்புரியாமல்

காந்தி தேசத்து மக்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்..

 

பெத்த மகனே என் அப்பன் சரியில்லை..

அவன் நடவடிக்கைகள் சரியில்லை என எழுதிவைத்து

தற்கொலை செய்து இறந்து போனார் ...

இப்படிப்பட்டவனை தலைமைக்கு கொண்டு வந்து வைத்து

தரணியில் இந்தியாவின் புகழை உயர்த்தலாம் என்று

கோட்சேவின் வாரிசுகளுக்கு  எவன் அறிவுறுத்தியது?

அதிகக் கொலை செய்தவனுக்கு அதிகாரம் கொடு எனும்

சூத்திரம் காந்தி தேசத்திற்குள் எப்படி வந்தது?...

 

காலமெல்லாம் அகிம்சை உண்மை நேர்மை என்று

தன் வாழ்வை அர்ப்பணித்த காந்தியின்  தேசத்தில்

கொலைகாரர்கள் எப்படிக் கோலோச்சுகிறார்கள்

எனப் புரியாமல் காந்தி தேசத்து மக்கள் விழிக்கிறார்கள்..

 

காந்தியைக் கொல்ல சதி செய்த கொடியவர்கள் பிறந்த

நாளெல்லாம் கொண்டாட்ட நாளாக மாறுவது எப்படி

எனத் தெரியாமல் காந்தி தேசத்து மக்கள்

கலங்கித் துடிக்கிறார்கள்….

 

கூப்பிய கைகளுக்குள் கொடும் ஆயுதம் மறைத்து

கொல்பவர்கள் இவர்கள் எனக் காந்தியே

உங்கள் தேசத்து மக்களுக்கு உண்மையை நீங்கள்

உயிர் போவதற்கு முன் உரைத்திருக்கக் கூடாதா?..

 

 

                                      வா.நேரு,07.06.2023

6 comments:

Anonymous said...

அருமை அருமை

tamiloviya said...

சிறப்பு..... யதார்த்தம்

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அய்யா...

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க...

Anonymous said...

போக்சோ சட்டம் எல்லாம்
சாதாரண மக்களுக்குத்தானா,

முனைவர். வா.நேரு said...

ஆமாம் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்...