வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில் கலகலவகுப்பறை சிவா அவர்கள் எழுதிய 'ஆயிரம் ஜன்னல் வகுப்பறை ' நூலினை திறனாய்வு செய்யும் வாய்ப்பு 23.12.2023 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கிடைத்தது. இந்த நூல் திறனாய்வு எனக்கே மிக நிறைவு அளிக்கும் திறனாய்வாக அமைந்தது மகிழ்ச்சி அளித்தது. அதனை உறுதி செய்யும் விதமாக மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் திரு.குமரகுருபரன் அவர்கள்,செல்பேசியில் அழைத்து நிகழ்வினைப் பற்றியும் நூலின் கருத்துகள் பற்றியும் உரையாடினார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் இருக்கும்.பேரா.குமரகுருபரன் அவர்களிடமே ஒரு நூலுக்கு உரிய செய்திகள் இருக்கிறது...அவருடைய வகுப்பறைகள் பற்றி.சார்,இதனை ஒரு நூலாகக் கொண்டு வாருங்கள் என்றேன்.
அதனைப்போல அறந்தாங்கி,அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது தாய்மாமா, புலவர் திரு.இரா.தங்கமுத்துராஜா அவர்கள் செல்பேசியில் அழைத்து,நிகழ்வு குறித்து பாராட்டியதோடு தனது கருத்துக்களையும் பதிவு செய்தார். அவரே மிகவும் அற்புதமாக உரையாற்றக்கூடியவர்.நீங்களும் ஒரு புத்தகத்திறனாய்வு செய்யுங்கள் மாமா என்று குறிப்பிட்டேன்.
'வாருங்கள் படிப்போம் 'வாட்சப் குழுவில் வந்த பின்னோட்டம் இவை.யூ டியூப் இணைப்பை இணைத்திருக்கிறேன்.கலகலவகுப்பறை சிவா அவர்களின் ஏற்ப்புரையும் இருக்கிறது.வாய்ப்பு இருக்கும்போது கேளுங்கள்.தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
"ஆயிரம் ஜன்னல் வகுப்பறை ஆயிரம் ஜன்னல்களை திறந்து விடும் என நம்புகிறேன்.திறனாய்வின் போது,நான் ஆசிரியராக ஆகாமல் போனதிற்காக வருந்தினேன்.கல்வித் துறை கவனிக்கப்பட வேண்டியவர்.இவர் புத்தகங்களை நேர்த்தியாக அறிமுகம் செய்த நேரு அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.இந்தப் புத்தகத்தை குழுவில் அறிமுகப்படுத்த உதவிய மா பேராசிரியர் உமா அவர்களுக்கு என் நன்றிகள்"
எழுத்தாளர் சித்ராதேவி வேலுச்சாமி, வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில்
"அருமையான ஆய்வு...இரண்டு நாட்களுக்குள் தயாராகி இன்றைய சூழலை உட்பொருத்தி ஆசிரியப் பணியின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்திருக்கிறார்.கல்வி சார்ந்த திறனாய்வு என்றாலே நேரு அண்ணா தான்..நோர்டிக் கல்வி,உனக்குப் படிக்கத் தெரியாது
எனக்குரிய இடம் எங்கே இந்த வரிசையில் இந்த ஆயிரம் ஜன்னல் வகுப்பறை..
எழுத்தாளர் சிவா இரயில் பயணத்திற்கு நடுவிலும் நம்மோடு முழுமையாகப் பங்கேற்றது சிறப்பு...பங்கேற்று சிறப்பித்த தோழமைகளுக்கு நன்றி"
பேரா.உமா மகேசுவரி அவர்கள் ,வாருங்கள் படிப்போம் குழு ஒருங்கிணைப்பாளர்
"அருமையான திறனாய்வு நேரு சார். அடிப்படை கல்வி எவ்வளவு முக்கியமோ அதோடு
வாழ்க்கைத்திறன்களுடன் கூடிய கல்வி மிகவும் முக்கியம் என்பதை அழகாக எடுத்து கூறினீர்கள். எழுத்தாளர் சிவா அவர்களின் குழந்தை நேய பள்ளிகள் உருவாக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். நம்மால் இயன்றவரை பங்களிப்போம். குழந்தைகளின் கல்வி எனும் சொர்க்க வாசலை திறந்து இன்றைய மாலைப்பொழுதை பயனுள்ளதாக்கிய இக்குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
டாக்டர் பிரமிளா ராஜ்குமார்..
மிகச்சிறப்பானதொரு திறனாய்வு அண்ணா. உங்களின் செய்தி தொகுப்பு எப்போதும் தங்களின் திறனாய்வை சிறப்பானதாக்கும். அதேபோல் தான் இன்றைய நிகழ்வும்..... வாய்ப்பிற்கு நன்றிகள் பேராசிரியை....
புல்லாங்குழல் இசை ஆசிரியர் அண்ணன் லோ.குமரன் அவர்கள்
முனைவர் நேரு அவர்களின் நேற்றைய திறனாய்வு அருமை. ஆயிரம் ஜன்னல் வகுப்பறை உண்மையாகவே ஆயிரம் சிந்தனைகளைத் தூண்டி விட்டிருக்கிறது. நூலாசிரியர் சிவாவுக்கு பாராட்டுகள். பிரமிளா அவர்களின் தகவல்கள் மிகுந்த மனவலியை ஏற்படுத்தி விட்டன. குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுக்கும் பங்கு ஆசிரியர்களுக்கு அதிகமாகவே உள்ளது. கெட்ட புத்தி உள்ளவன் வாழ்ந்து மடியும் வரை சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தல் தான்.
நேரு சார். உங்களிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். நீங்கள் ஒரு நல்லாசிரியர். ஆசிரியர் பணி குறித்த ஏக்கத்தை விட்டு விடுங்கள்.
இடதுபுறமுள்ள கதவுகள்...சிறுகதை நூல் ஆசிரியர் தோழர் ரெஜினா சந்திரா...
https://www.youtube.com/live/JkeUZytns10?si=WeERCDOxH7aSDPnv
2 comments:
🙏 பல அரிய நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து கொண்டிருப்பதற்கு பாராட்டும்,நன்றியும் அண்ணா.
மகிழ்ச்சியும் நன்றியும்
Post a Comment