மறந்துவிடுதல்...
செல்போனை
எங்கு
வைத்தோம் என்பதை
மறந்துவிடுதல்
சில நேரங்களில்
மகிழ்ச்சியான
தருணமாக
மாறி
விடுகிறது...
ஏதோ ஒரு
புத்தகத்தை
முழுமையாக
வாசித்து
முடிப்பதற்கும்..
எழுத
நினைத்த செய்தியை
எழுதி
முடிப்பதற்கும் இந்த
செல்போனை
மறந்து போதல்தான்
வாய்ப்பாக
இருக்கிறது...
வீட்டு
வேலைகளைச் செய்வதற்கும்
வாங்காமல்
விட்டுவிட்ட
மாத்திரைகளை
நினைவில்கொண்டு
வாங்குவதற்கும்
கூட
இந்த
செல்போனை மறப்பதுதான்
வசதியாக இருக்கிறது...
பழகிய
கால நினைவுகளை
மனதில்
நிறுத்துவதற்கும்
பழகிய
நண்பர்களோடு
நட்பை
முறிக்கும் அளவிற்கு
‘வாட்சப்’
பில்
அரசியல்
விவாதம்
செய்யாமல்
இருப்பதற்கும் கூட..
இந்த
செல்போனை
மறப்பதுதான்
வசதியாக...
வாய்ப்பாக
இருக்கிறது...
வா.நேரு, 14.10.2025
2 comments:
ஆமங்க அண்ணே! திட்டமிட்டு மறக்காவிட்டால் நம்மைத் தின்றுவிடும் போலிருக்கு
ஆமாம்....நன்றி.
Post a Comment