2026-ஆம் ஆண்டில் வாருங்கள் படிப்போம் குழுவின் சார்பாக நடைபெற்ற முதல் திறனாய்வுக்கூட்டம்,வாருங்கள் படிப்போம் குழுவின் 333-வது கூட்டம் இன்று சனிக்கிழமை(03.01.2026),இணைய வழிக்கூட்டமாக மாலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது. நிகழ்வில் அறிமுகங்களுக்கு அடுத்து ஒரு 45 நிமிடம் இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த நாவலின் சிறப்பு, பெரியவன் என்னும் பெயர், நடராசன், வடிவு மற்றும் துணைக் கதாபாத்திரங்கள். விவசாயி, பகுதி நேர மாலை முரசு பத்திரிக்கை நிருபர்,குடும்பத்தில் மூத்த அண்ணன்,திராவிடர் கழகத் தொண்டர் என்று இந்த நாவல் சுட்டிக்காட்டும் பன்முகத்தன்மைகளை சுட்டிக்காட்டி, திருவாரூர் அருகில் இருக்கும் கண்கொடுத்த வனிதம் என்னும் ஊரும் அதனைச் சுற்றி இருக்கும் ஊருகளும் ஆறுகளும், ஆற்று விவசாயமும் என்று இந்த நாவல் சுட்டிக்காட்டும் பலவற்றை இணைத்துப்பேசினேன். இன்றைய உரை எனக்கே ஒரு நிறைவாக இருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து நாவல் ஆசிரியர், பல நூல்களின் ஆசிரியர் எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூல் எழுதியது பற்றியும், தன்னுடைய தந்தைதான் இந்த நாவலில் வரும் நடராசன் என்பதையும் குறிப்பிட்டு ஒரு 10 நிமிடங்கள் ஏற்புரை நிகழ்த்தினார். அத்ற்கு அடுத்து கேள்வி பதில்களும் கருத்துகளும் என நிகழ்வு 9 மணிவரை நடந்தது.மகிழ்ச்சி. நிகழ்வில் தொடக்கம் முதல் கடைசிவரை நாவல் ஆசிரியர் சுந்தரபுத்தன் அவர்கள் இருந்ததும், கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் கூடுதல் சிறப்பு.
நானும் எழுத்தாளர் சுந்தரபுத்தனும் பேசிய காணொளி... வாய்ப்பு இருக்கும்போது கேளுங்கள்.
நிகழ்வினை அருமையாக ஒருங்கிணைத்த தோழமைகள் கலையரசி அவர்களுக்கும்,வாருங்கள் படிப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேரா உமா மஹேஸ்வரி அவர்களுக்கும் மற்ற தோழமைகளுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.


6 comments:
அற்புதமான தந்தையை பெருமை படுத்தும் அன்பான மகன் தந்த அருமையானதொரு கதை. மனதை தொட்ட புத்தகம் . நேரு அய்யாவின் சரளமான நடையும் எழுத்தாளரின் அனுபவப் பகிர்வும் -From the horse’s mouth- பின்னூட்டங்களும் மிகவும் சிறப்பு.
வாழ்த்துக்கள்
எழுத்தாளர் கலைகோபி...வாருங்கள் படிப்போம் குழுவில்
நன்றி...
மிகச்சிறந்ததொரு நூல் மற்றும் எழுத்தாளர் அறிமுகம் ண்ணா... எழுத்தாளர் லோ.குமரன்...
வாருங்கள் படிப்போம் குழுவில்...
நன்றிங்க அண்ணே..
உன்னதமான திறனாய்வு நேர்த்தியான நூல். அண்ணன் நேரு கலக்கிவிட்டார். பேராசிரியர் மகாதேவன் கேட்டது போல எனக்குக் கூட திடீரெனச் சந்தேகம் செவ்வாய் என்று நினைத்துக் கொண்டேன். பேராசிரியர் சொன்னது போல அண்ணன் நேரு உண்மையாகவே பிஎஸ்என்எல் அனுபவக் கதை எழுதலாம்
எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன்
நன்றிங்க அண்ணே..
Post a Comment