வழக்கறிஞர் சித்தார்த்தா!
கண நேரத்தில்
கனல் நீராய்
மாறிப்போகும் வாழ்க்கை!...
வழிவழியாய் வந்த
திராவிடர்
கழகத்துக் குடும்பத்தின்
வாரிசு நீ..…
அதனாலோ அத்தனை
அறிவு…
அத்தனை அன்பு..
அத்தனை பணிவு…
அத்தனையும் கண்ப்பொழுதில்
காணாமல் போனதே
சட்டென்று நிகழ்ந்த
விபத்தால்…
கதறி அழும் அந்தச்
சகோதரிக்கு
அவரின் இணையருக்கு
என்ன சொல்லி ஆறுதல்
சொல்ல…
ஒருநாள் பரத நாட்டியம்
ஆடிக்காட்டினாய்!
இன்னொரு நாள் வேறொரு
குரலில் பேசிக்காட்டினாய்!
உற்சாகம்.. நகைச்சுவை..
வாழ்வில் அடுத்தடுத்து
செய்ய வேண்டிய
வேலைகள் என
அடுத்தவர்களுக்கு
எடுத்துக்காட்டாய்த்தானே
நீ இருந்தாய்
எவர் மனது நோகவும்
என்றும் நீ நடந்ததில்லை..
உதவ வேண்டிய நேரங்களில்
கைகளை எப்போதும்
நீ இழுத்துக்கொண்டவரில்லை..
இன்னும் உயர்பதவிக்கு
போவாய் என நாங்கள்
நினைத்திருந்த
வேளையில்
இடியாய் இறங்கிய
செய்தியால்
இதயமும் நொறுங்கியதே…
வீரவணக்கம்! வீரவணக்கம்!
எங்கள் தோழர் சித்தார்த்தா..
குறுகிய காலம்
பழகினும்
நெடுங்காலம் பழகியவன்போல்
அன்பைப் பொழிந்தாய்
பண்பைக் காட்டினாய்
நூறாண்டு வாழும்
கனவோடு
உடலினைப் பேணினாய்..
அரை நூற்றாண்டு
வயதில் உமை
நாங்கள் பறிகோடுத்தோம்
தோழா!
வீரவணக்கம் ! வீரவணக்கம் !.
வழக்கறிஞர் சித்தார்த்தா!
கரைபுரண்டு ஓடும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
அய்யகோ என மனம்
குமுறிடினும் அடுத்தடுத்த
இயக்க வேலைகளால்
உமக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்
தோழா..
வா.நேரு, 10.01.2026

No comments:
Post a Comment