Saturday, 30 November 2024
கடந்து செல்லுதல்...
Friday, 29 November 2024
அமாவாசை...
இறந்து போன கணவன்
இன்னமும் தன்மீது
சந்தேகப்பட்டு...
காக்காய் வடிவில்
கண்காணிப்பதாக எண்ணி...
அடித்து நொறுக்க
கட்டையோடு அலைகிறாள் அவள்...
பாவம் காக்காய் என
எப்படி அவளுக்குப் புரியவைப்பது?.
வா.நேரு,30.11.2024
குறுங்கவிதை(20)
Thursday, 28 November 2024
கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்...
பெண்கள் உண்மையை
உடைத்துப் பேசுவதும்...
பெருங்குரலில்
பாடுவதும்...
அச்சத்தைத் தருகிறது
ஆதிக்கவாதிகளுக்கு…
‘கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!’
வா.நேரு,29.11.2024
குறுங்கவிதை(19)
Wednesday, 27 November 2024
இரத்த உறவுகள்…
இருக்கும்வரை
தங்களால் ஏற்றமுடியாத
மதக்குறியீட்டை...
இறந்து கிடக்கும்
தோழனின் உடலுக்குள்
ஏற்றத் துடிக்கிறார்கள்
அவரின் இரத்த உறவுகள்…
வா.நேரு,28.11.2024
குறுங்கவிதை(18)
Tuesday, 26 November 2024
அதுதான் சுயமரியாதை..
எவ்வளவு பெரிய
சூப்பர் கம்ப்யூட்டர்
என்றாலும்
காரித்துப்பினால்
எதிர்வினையாற்றுமா?
மனிதன் மீது துப்பினால்
சும்மா விடுவானா?
அதுதான் சுயமரியாதை..
என்றவர் வி.பி.சிங்..
நினைவைப் போற்றுவோம்..
வா.நேரு,27.11.2024
குறுங்கவிதை(17)
Monday, 25 November 2024
வினையூக்கி நஞ்சு
வினையூக்கி நஞ்சு
பல வகையில்
நான் உயர அவரும்...
அவர் உயர நானும்
உதவிக் கொண்டிருந்தோம்…
அவரை விட நான்
உயரும் வாய்ப்பு
வந்தபோது
பேசுவதை நிறுத்திக் கொண்டார்..
வா.நேரு,26.11.2024
குறுங்கவிதை(16)
Sunday, 24 November 2024
வினையூக்கி...
தினந்தோறும் கவிதை
எழுதுபவர்களை
ஏகத்திற்கும் பகடி
செய்து
எழுதியிருந்தார்
அக் கவிஞர்..
எப்போதாவது கவிதை
எழுதும்
எனக்கு அதைப் படித்தபின்பு
தின்ந்தோறும் எழுதத்
தோன்றுகிறது
வா.நேரு,25.11.2024
குறுங்கவிதை(15)
Saturday, 23 November 2024
என்ன செய்வது?
கல்விக் கூடமாக
மாறிய
சிறைச்சாலை...
தினத்தந்தி செய்தி..
சிறைச்சாலைகளாக
மாறி நிற்கும்
கல்விக்கூடங்களை
என்ன செய்வது?...
வா.நேரு, 24.11.2024
குறுங்கவிதை(14)
Friday, 22 November 2024
காயங்கள்…
நட்பிலும்
கூடக் காயங்கள்…
ஆனால் இவை
பகிரப்படுவதற்காக
அல்ல..
பத்திரப்படுத்தி
பெருமூச்சு விட்டுக்கொள்வதற்கு…
வா.நேரு,22.11.2024
குறுங்கவிதை(13)
Wednesday, 20 November 2024
காத்துக்கிடக்கும் பிணம்போல
அதிகாலையில்
மின் சுடுகாட்டில்
எரிக்கப்படுவதற்காகக்
காத்துக்கிடக்கும்
பிணம்போலக்
காத்துக்கிடக்கிறார்கள்…
மனிதர்கள்
டாஸ்மார்க்
கடைகளில்…
குறுங்கவிதை(12)
Tuesday, 19 November 2024
பிண வாடை இல்லையெனில்...
எரியும்
பிணத்தின் வாடை
சகிக்க
முடியாததாய்
இருந்தது
வந்த புதிதில்
என்றான்…
சுடுகாட்டுக்கு
அருகில்
குடியிருப்பவன்…
இப்போது
?
என்றேன் நான்..
‘பிண
வாடை இல்லையெனில்
தூக்கம்
வர மறுக்கிறது’
என்றான்..
பழகிப்போகிறது
எல்லாமும்…
வா.நேரு, 19.11.2024
துளிப்பா(11)
Monday, 18 November 2024
ஊமைச் சிறுவன்.....
பாம்பு கடித்துச்
சாவதாய்
கனாக் கண்ட
ஊமைச் சிறுவன்
யாரிடமும் சொல்ல
இயலாமல் இருத்தல்போல
நாடு கிடந்து தவிக்கிறது…
வாய்ப்பூட்டுச்
சட்டங்களால்…
வன்முறைக் கும்பல்களால்…
வா.நேரு,18.11.2024
துளிப்பா(10)
Sunday, 17 November 2024
ஆகச்சிறந்த விமர்சனம்...
பேச்சாளர்
சிரித்துக்கொண்டும்
பேசலாம்…
சிரிக்கவைத்தும்
பேசலாம்..
எப்போதும் கொதிநிலையில்
இருப்பது போலத்தான்
பேச வேண்டுமா அய்யா ?
சிரித்துக்கொண்டே கேட்ட
அக்கவிஞரின் கேள்வி
ஆகச்சிறந்த விமர்சனம்
வாழ்வில்…
வா.நேரு, 17.11.2024
துளிப்பா(9)
Friday, 15 November 2024
கும்பிட மறுப்பார்களா என்ன?
'பொன்னியின்
செல்வன்’
குந்தவைப்
பிராட்டியும்
நாளை
கடவுளாகலாம்…
இராமாயணக்
கதை
சீதையைக்
கும்பிடுகிறவர்கள்
நாளை
குந்தவைப்
பிராட்டியை
கும்பிட
மறுப்பார்களா என்ன?
வா.நேரு,15.11.2024
துளிப்பா (8)

