Monday 6 June 2022

இலக்கியம் படைக்கும் இராணுவ வீரர்

 வாருங்கள் படிப்போம் ,வாருங்கள் படைப்போம் என்னும் குழுக்கள் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறது. நல்ல புரிதல் உள்ள நண்பர்க்ள் இருபால் நண்பர்கள் நிறையப் பேர் அறிமுகம் ஆகின்றனர். நாளடைவில் நல்ல நண்பர்களாகவும் மாறுகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரைச்சார்ந்த வினோத் பரமானந்தன் அவர்களும் அவர்களில் ஒருவர்.இன்று 06.06.2022 மதுரையில் அவரைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நிறையப் பேசிக்கொண்டிருக்க இருவருக்கும் நேரமும் கிடைத்தது.சில வாரங்களுக்கு முன் வாருங்கள் படைப்போம் குழுவில் படைப்பாளியாய் அவர் கலந்து கொண்டதையும்,மிக அருமையான கேள்விகளை முன்வைத்து அண்ணன் குமரன் அவர்கள் கேள்வி கேட்டதையும் அதற்கு வினோத் அவர்களின் நல்ல பதில்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இராணுவத்தில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி தன் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். இலக்கியம் படைப்பதிலும் படிப்பதிலும் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் பகிர்ந்து கொண்ட வினோத் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விவாதித்தார்.. இந்த சந்திப்பு பற்றி 




"அன்பிற்கினிய தோழர்

நேரு ஐயா அவர்களை..

இன்று

சங்கம் வைத்து தமிழ்

வளர்த்த மதுரையில்

சந்தித்தேன்...


அன்புடன் என்னைக்

காண வந்து..

"ஆழினி " உடன் இன்னும்

பல நூல்கள் தந்து...

காபி குடி...

நிறைய புத்தகம் படி

என்றே

உரைத்து..

உறவாடிச் சென்றார்..


காணொளியில்

கண்டவரை..

காபியோடு

கண்ணருகே

கண்டதில்

பெரும் மகிழ்ச்சி." என்றும் வாட்சப் குழுக்களில் வினோத் பரமானந்தன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். 

கூடலூரில் வாழ்ந்து மறைந்த அவரின் பெரியப்பா மானமிகு.பரமானந்தன் அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டர்,திராவிடர் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்னும் செய்தியையும் பகிர்ந்து கொண்டார். நான் பெரியகுளம் பகுதியில் பணியாற்றியபோது,கூடலூர் அய்யா ஜனார்த்தனம் அவர்களைச்சந்திக்க வரும்போது ,அவரைச்சந்தித்த நினைவு இருக்கிறது என்று சொன்னேன். மிக மகிழ்ச்சி தந்த சந்திப்பு. 




என்னுடைய மகள் சொ.நே.அறிவுமதி எழுதிய 'ஆழினி 'நாவல், என்னுடைய கவிதைத் தொகுப்புகளான 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', அண்மையில் வெளிவந்த 'சொற்களின் கூடுகளுக்குள் 'கவிதை தொகுப்பு மற்றும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பான 'சங்கப்பலகை'யையும் அளித்து மகிழ்ந்தேன்.உறுதியாகப் படிப்பார்கள்,படித்து கருத்து சொல்வார்கள் என்பவர்களிடன் புத்தகங்களைக் கொடுப்பதைவிட மகிழ்ச்சி தருவது எது?.

6 comments:

Anonymous said...

Wow valthukkal neru sir and vinod Brother
Yes truly accepted ..this group give us lot more windows
Good to know you both
Happy to see you all like this

Anonymous said...

நல்லதொரு சந்திப்பு 💐💐💐

முனைவர். வா.நேரு said...

கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்.பெயர் இல்லாததால் யார் என்று தெரியவில்லை.

Anonymous said...

ஒரு குழுமத்தின் வழியாக நேரில் சந்தித்து உறவுகளை மேம்படுத்தும் செயல் தமிழைத் தவிர வேறெதுவும் இல்லை..நேசங்கள் ஐயா...விருந்தோம்பலும்,கருத் தோம்பலும் கூறிய விதம் அருமை,காபி குடி,புத்தகம் படி என்று...ஒரு சந்திப்பின் பிரமிப்பை உண்மையாகவும் உணர்வுடனும் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா..

முனைவர். வா.நேரு said...

கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

மேலை சு சுசிலா said...

பூமியில் இரண்டு நட்சத்திரங்கள் சந்திப்பு 💐 மிகச் சிறப்பு நேரு அண்ணா. பாராட்டுக்கள் வினோத்