எளிதாகப் பணம்
சம்பாதிக்க வேண்டும்
எனும் ஆசை மனிதர்களைப்
பாடாய்ப் படுத்துகிறது…
‘சுமார்ட் போனி’ன் வழி
வரும் வகைவகையான
விளம்பரங்கள் எளிதில்
மனதைச் சுண்டி இழுக்கிறது…
கிராமத்தில் சூதாடிகள்
ஏதோ ஒரு மோட்டார்செட்
கட்டிடத்திற்குள் அமர்ந்து
‘ரம்மி’ விளையாடிக்
கொண்டிருப்பார்கள்…
பல நாள் கண்டுகொள்ளாத
காவல்துறை ஒரு நாள்
அவர்களைக் கண்டுபிடித்து
தெருக்களின் வழியே
இழுத்து வரும்…
சூதாடிகள் இவர்கள் என
ஊருக்கு அடையாளம் காட்டி
வழக்குப் போடும்..
இப்போதெல்லாம் நவீன
சூதாடிகளை எளிதில்
அடையாளம் காண
இயலுவதில்லை..நம்மைப்
போலத்தான் அவர்களும்…
சுமார்ட் போனைச் சுரண்டிக்
கொண்டே இருக்கிறார்கள்…
‘நெட் பேங்க்’ ,’ஜிபே’ எல்லாம்
வந்த பிறகு பணம் எப்படி
எவருக்கு அனுப்பப்படுகிறது
என்பதை நம்மால் எளிதில்
கணிக்க இயலுவதில்லை..
சில குடும்பங்களில் நிகழ்ந்த
துக்கங்களை விசாரிக்கச் செல்லும்
இடங்களில்தான் அவர்கள்
‘சுமார்ட் போன் சுரண்டிச்
சூதாடிகள்’ என்பதே தெரியவந்தது..
பல குடும்பங்களை கெடுக்கும்
‘ஆன் லைன் சூதாட்டம்’ பற்றி
அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே…
நம் உறவுகள் நட்புகள்
அதற்குள் மாட்டி இருந்தால்
‘முள்ளுக்குள் மாட்டிய சேலையை
எடுப்பது’ போல் பக்குவாய்க்
கையாண்டு வெளியில்
கொண்டு வாருங்கள்!
அவ்வளவு எளிதில்லை என்றாலும்
‘கவுன்சிலிங்’ அழைத்துச் செல்லுங்கள்
இழப்புகளை அவர்களுக்குப்
புரிய வையுங்கள்…
எனக்கென்ன என்று இருந்தால்
பொருளாதார இழப்புகளும்..
உயிர் இழப்புகளும்
தவிர்க்க இயலாதவை…
கவனத்தில் கொள்ளுங்கள்…
வா.நேரு, 13.10.2025
2 comments:
தலைமுறையே அழிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை தரும் உண்மை!
வி. இளவரசி
ஆமாம்...நன்றி கருத்திற்கு
Post a Comment