மழை வரும்போல்
இருக்கிறது வானம்…
ஒரு சொட்டு மழைத்தண்ணீர்
தன் உடலில் விழுவதற்குமுன்
வீட்டிற்குள் சென்று
அடைந்துவிட வேண்டுமென்று…
இருசக்கர வாகனத்தை
விரட்டிக்கொண்டு
பறக்கிறார்கள்
மனிதர்கள்..
மின் வயரில்
அமர்ந்திருக்கும்
பறவை ஆற அமர
எதையோ இசைத்துக்
கொண்டிருக்கிறது…
மழைத்துளியில்
நனைந்துகொண்டே
பாடும் ஆசையிருக்குமோ
அதற்கு!
வருமுன்னர்க் காக்கும்
ஆசைதான் அத்தனை
அவதிகளுக்கும்
காரணமோ நமக்கு?...
வா.நேரு, 11.11.2025
No comments:
Post a Comment