Thursday 30 April 2020

எல்லைக் கோடுகளை பெரிதாக்கி.........வா.நேரு,


உழைக்கும் தோழர்களுக்குள்
ஓராயிரம் பிரிவு...
அதனை ஊதிப்பெருக்கும்
கடமையே சாதிமதப்பிரிவு....

அனைத்து சாதியும்
ஆளுக்கொரு நாள்
மலக்குழியில் இறங்கி
சுத்தம் செய்ய ஆணையிடுங்கள்
உடனடி இயந்திரம்
உடனே தயாராகும்...
இனமுரசு சத்யராஜின் முழக்கம்...

எவர் எவரோ
ஆள்பவர்களாத் தோன்றினும்
ஆள்பவர்கள் முதலாளிகளின்
ஏவல் ஆட்களே.....
வாராக் கடனும் அவர்களால்...
வங்கிகள் திவாலும் அவர்களால்...

உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராய்
சாதியால் மதத்தால்
மக்களைப் பிரிக்கும்
சதிகாரர்கள் ஆட்சிக்கட்டிலில்....
இங்கு மட்டுமல்ல உலகெங்கும்...

உழைப்பவனை அடிமையென
எண்ணும் உலுத்தர்களே
உலகெங்கும் ஆட்சிக்கட்டிலில்...
பிழைப்பதற்கு டெட்டால் ஊசி
போடப் பரிந்துரைக்கும் மேதாவிகள்...

நாட்டைப் பிரிக்கும்
எல்லைக் கோடுகளை பெரிதாக்கி
உழைக்கும் மக்களின்
வயிற்றுப்பசியினை சிறியதாக்கி
தேசபக்தி புலம்பல்கள் உலகெங்கும்..

தொழிலாளர்கள் பங்குதாரர்களாய்
ஆகும் தொழிற்கூடங்களே
வேண்டும் என்ற தோழர் பெரியார்

எட்டுமணி நேர வேலையை
எல்லாருக்கும் உறுதியாக்கிய
சட்டம் தந்த  தோழர் அம்பேத்கர்

உழைக்கும் தோழர்களின்
விடியலுக்காய் புதிய கீதம்
பாடிய தோழர் மார்க்ஸ்
இவர்களின் கருத்துக்களே
உழைக்கும் தோழர்களே !
நம்மை ஒருங்கிணைக்கும்!
விடியலுக்கு வழி வகுக்கும் !

இருட்டைக் கண்டு பயம் வேண்டாம்!
கரனா இருட்டும் ஒரு நாள் விடியும் !
சாதி மத இருட்டும் ஒரு நாள் ஒழியும்!
நம்பிக்கையோடு சொல்வோம்...
உலகத்தொழிலாளர்களே ஒன்றிணைவோம்!
ஒரு மித்த குரலில் ஓங்கிச்சொல்வோம்
வாழ்க! வாழ்க ! மேதினம் வாழ்க !
செவ்வானமாய் உலகம் ஒரு நாள் சிவக்கும்!
அந்நாளில் எல்லோருக்கும் எல்லாமுமாய்
புதிய உலகு விடியும் !
வாழ்க ! வாழ்க ! தொழிலாளர் தினம் வாழ்க!

                                           வா.நேரு,01.05.2020. 

4 comments:

anandam said...

அருமை அருமை அண்ணே...
பொதுவுரிமை - பொதுவுடைமை சமுதாயம் காண ஒன்றுபட்டு உழைப்போம்...

முனைவர். வா.நேரு said...

"பொதுவுரிமை - பொதுவுடைமை சமுதாயம் காண ஒன்றுபட்டு உழைப்போம்..."

Anonymous said...

உணர்ச்சியூட்டும் வரிகள்! புது விடியலுக்கான நாள் காண்போம்!

முனைவர். வா.நேரு said...

நன்றி..மகிழ்ச்சி...பெயரோடு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.