அவரின்
நேரத்தின்
அருமை
தெரிகிறது
எனக்கு…
இரண்டு நிமிடம்
பேசலாமா
எனக்கேட்டு
பேச வேண்டியதைப்
பேசிவிட்டு
வைத்து
விடுகிறேன்
நான்...
சில
நிமிடங்களில்
அழைப்பு
வருகிறது..
அண்ணே, ஏதுமே பேசாமல்
சடக்கென்று
முடித்து
விட்டது போல்
தோன்றியது...
நலம்தானே...
உடல்நிலை
எல்லாம்
சரியாக இருக்கிறதா?
எனப் பல ஆண்டுகளுக்கு
முன் ஆற அமரப்
பேசியது போல
பேச
ஆரம்பிக்கிறார்..
அவரின்
கரிசனம்…
அவரின்
அன்பு…
ஆழமாய்ப்
புரிகிறது
அவரது
சில சொற்களில்
அவரது
அலுவலகத்தின்
நிலைமை
நான் அறிவேன்..
எப்போதும்
பரபரப்பாய்
எப்போதும்
ஆட்கள் சூழ…
அவரைச் சுற்றி
ஒலிக்கும்
செல்பேசிகளின்
ஓசை மீண்டும்
அவரது
நேரமின்மையை
உணர்த்துகிறது...
அவரது
பேச்சில் ஒரு
பரபரப்பு
கூடுகிறது…
நிலைமையை
உணர்கிறேன்..
எல்லோரும்
நலமே..
நேரில் ஒருநாள்
ஆற அமரப்
பேசுவோம் என்று
செல்பேசி
இணைப்பைத்
துண்டித்துக்
கொள்கிறேன்
நான்!..
ஆற
அமர
உட்கார்ந்து
பேசும்..
கிண்டலும்
கேலியுமாய்
அரட்டை
அடித்து
மகிழும்
காலமெல்லாம்
கனவு
போலவே
இருக்கிறது
இப்போதெல்லாம்..
வா.நேரு,28.01.2026
No comments:
Post a Comment