உண்மையான பாராட்டு
எப்போதும் நமக்கு ஓர்
உத்வேகம் தருகிறது…
இன்னும் பணியாற்ற..
இன்னும் எழுத…
இன்னும் வாசிக்க…
இன்னும் இன்னும்
எத்தனை உந்துதல்களை
நமக்கு ஒரு பாராட்டு
தருகிறது !
நேற்றைக்கு முந்தைய நாள்தான்
‘உண்மை ‘ இதழுக்கு
கட்டுரை ஒன்றை
அனுப்பி இருந்தேன் !
‘பாம்புக்கடி ‘ பற்றிய
கட்டுரை அது !
நேற்று காலை
மதுரைக்கு வந்த
93 வயது இளைஞர்
அய்யா ஆசிரியர் அவர்களைப்
புத்தகம் கொடுத்து
மதுரைக்கு வரவேற்றபோது ,
நீங்கள் ‘உண்மை’க்கு அனுப்பிய
‘பாம்புக்கடி’ பற்றிய
கட்டுரையைப் படித்தேன் …
நன்றாக இருக்கிறது…
நிறையப் புதிய செய்திகள்…
எனப் பாராட்டினார்…
மனதிற்குள் அப்படி ஒரு
மகிழ்ச்சி பொங்கி வழிந்தது…
மிகப்பெரும் இலக்கியவிருதினைப்
பெற்றது போல் உணர்வு
நிரம்பியது எனக்கு…
முதல் நாள் அனுப்பிய
கட்டுரையை உடனே படித்து
பார்த்தவுடன் பாராட்டும்முறை…
இந்த வயதில்…
கற்றுக்கொடுத்துக்கொண்டே
இருக்கிறார் எங்கள் ஆசிரியர் !
அவரிடம் கற்றுக்கொண்டே
இருக்கிறோம் நாங்கள்…
வா.நேரு, 22.01.2026

4 comments:
ஆசிரியர் என்றால் ஆசிரியர்தான். சந்திக்கும்போதெல்லாம் ஏதோ ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துகொண்டே இருக்கும் பெருந்தகை. வாழ்த்துகள் அண்ணா.
நன்றி தங்கையே....
ரயிலடியில் காலை ஐந்து முப்பதுக்கு கொடுத்த நூலைப்பற்றி மறுபடியும் காலை8.30 க்கு சந்திக்கும் போது பேச ஆரம்பித்து விட்டார். சென்ற தடவை 10.01.2926 மதுரை வந்த போது.... வாழும் அதிசயம்... வழிகாட்டும் பேராற்றல்... அய்யா ஆசிரியர்...
நன்றி.பெயர் இல்லைங்க....
Post a Comment