Thursday, 1 January 2026

இதுவே என் பாதை...இதுவே என் பயணம்…

 

உண்மைக்காக நிற்பதும்

உண்மைக்காக நிற்கும்

தோழர்களோடு

இணைந்து

நிற்பதுமே வாழ்க்கையாய்

 

பல மணி நேரங்கள்

பயணம் செய்து ..

உண்மைக்காக உழைக்கும்

ஒருசில தோழர்கள்

மத்தியில் பேசி

அவர்களோடு இணைந்து

ஏதோ ஓர் உணவு விடுதியில்

சாப்பிட்டுப் பேருந்தில்

திரும்பும்வேளை..

நண்பர் ஒருவர்…

 

ஒரு மணி நேரம் பேசியதற்கு

இவ்வளவு  அளித்தார்கள்

நீங்கள் எல்லாம் இதற்குக்

கொஞ்சம் முயற்சி செய்யலாம்

என்கிறபோது

வ்வித சபலங்களுக்கும்

ஆட்படாமல் தந்தை பெரியார்

போட்டுத் தந் பாதையில்

எனும் உறுதிமொழி

நினைவில் வருகிறது

 

நன்றாகப் பேசுகிறீர்கள்

இன்னும் கொஞ்சம்

நகைச்சுவை கலந்து

இதைக் கொஞ்சம்

பேசாமல் தவிர்த்தால்

நீங்களும் நிறையச்

சம்பாதிக்கலாம் எனும்

அறிவுரையும் வருகிறது...

அவ்வப்போது நண்பர்களிடமிருந்து

 

நான் பேச்சாளர் அல்ல

நான் எழுத்தாளர் அல்ல..

என் கருத்தைச் சொல்வதற்கு

பேச்சை, எழுத்தைப்

பயன்படுத்துகிறேன்

அம்புட்டுத்தான் என்றார்

அய்யா பெரியார்

 

பேசிப் பணம் சேர்ப்பது

எம் நோக்கமல்ல

உண்மைக்காக உழைக்கும்...

ஏன் உண்மைக்காகச் சாகும்

என் கருஞ்சட்டைத் தோழர்களோடு...

இருக்கும் காலம்வரை

இணைந்து நிற்பேன்

அவர்களின் வீரவணக்கத்து

முழக்கத்தோடு….

உடல் தானம் செய்த என் உடலை

மருத்துவமனைக்குக்

கொண்டு செல்லும் காலம்வரை

இதுவே என் பாதை

இதுவே என் பயணம்


                               வா.நேரு,

                               01.01.2026

6 comments:

Anonymous said...

பொய்யே இல்லாத மெய்க்கவிதை...எங்கள் எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் என்பது தான் எங்கள் பெருமை அண்ணே!

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அண்ணே...

Anonymous said...

பயணம் தொடரட்டும்

Anonymous said...

பயணம் தொடரட்டும்

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர் ஆட்டோ செல்வம்...

Anonymous said...

எந்த எதிர்பார்ப்பும் எதிர்பார்க்காத பணியே தந்தை பெரியார் கொள்கை பணி.. இதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள்....