Thursday, 19 December 2024

ஓராயிரம் முறை...

 

சம நீதிக்காய்

கொழுந்து விட்டெரியும்

கொள்கைத் தீயின் பெயர்

அண்ணல் அம்பேத்கர்...

அன்று அவர் எரித்தது

ஒரு குலத்திற்கு 

ஒரு நீதி சொல்லும்

'மனு நீதி'யை...

இனி அவர் பெயர்

எரிக்கப்போவது 

ஜாதியை..அதன் மீதியை...

உரக்கச் சொல்வோம்

ஓராயிரம் முறை...

அம்பேத்கர் ! அம்பேத்கர்!

அம்பேத்கர் ! அம்பேத்கர்1...


                                               வா.நேரு ,20.12.2024

                                               குறுங்கவிதை(34)

No comments: