Saturday, 21 December 2024

கொட்டோ கொட்டென்று கொட்டுமென

 வெள்ளையும் சொள்ளையுமாய்த்தான்

வந்திருக்கிறார்கள்

படித்தவர்கள்போல்தான்

இருக்கிறார்கள

 நாமக்கல் கோயிலில்

உட்கார்ந்து மந்திரம் சொன்னால்

பணம் கொட்டோ 

கொட்டென்று கொட்டுமென

ஜோதிடன் ஒருவன் யூடியூப்பில் 

சொன்னானாம்..

கூட்டமோ கூட்டம்..அதிகாலை

6.30க்கே அப்படி ஒரு கூட்டமாம்..

எப்படிக் கொட்டும் பணம்?

பேராசையே  பக்தி


                                                                    வா.நேரு,21.12.2024

                                                                    குறுங்கவிதை(35)

No comments: