Monday, 9 December 2024

அடிக்காதே பாம்பை என்பார்...

 

அவைகள் இல்லையெனில்

எலிகள் பெருத்துவிடும்..

பயிரெல்லாம் நாசமாகும்…

அடிக்காதே பாம்பை என்பார்

செவக்காட்டில் அம்மா...

அப்படித்தான் நாட்டிலும்

சிலரைக் கடந்து

செல்ல வேண்டியிருக்கிறது…

                             வா. நேரு, 09.12.2024

                               குறுங்கவிதை(24)

 

No comments: